/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மேலப்பிடாவூரில் இன்று புரவி எடுப்பு
/
மேலப்பிடாவூரில் இன்று புரவி எடுப்பு
ADDED : ஜூலை 08, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மேலப்பிடாவூரில் உள்ள வெள்ளாரப்பன் (எ) முத்தையா அய்யனார்கோயிலில் கும்பாபிஷேகம்கடந்த வருடம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், உலக நன்மைக்காகவும் 11 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று புரவி எடுப்பு விழா நடைபெற உள்ளது.
ஜூலை 1ம் தேதி பக்தர்கள் காப்புக் கட்டி விரதம் இருந்தனர். இன்று நடைபெறும் புரவி எடுப்பு விழாவில்  கிராம மக்கள் மானாமதுரையில் இருந்து புரவிகள், மாடுகள் மற்றும் சுவாமி உருவங்கள் ஆகியவற்றை பாதயாத்திரையாக கொண்டு வர உள்ளனர்.

