/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஸ்கேட்டிங் போட்டியில் முதலிடம் பெற்று தேசிய போட்டிக்கு தகுதி
/
ஸ்கேட்டிங் போட்டியில் முதலிடம் பெற்று தேசிய போட்டிக்கு தகுதி
ஸ்கேட்டிங் போட்டியில் முதலிடம் பெற்று தேசிய போட்டிக்கு தகுதி
ஸ்கேட்டிங் போட்டியில் முதலிடம் பெற்று தேசிய போட்டிக்கு தகுதி
ADDED : நவ 16, 2025 11:42 PM

காரைக்குடி: மாநில ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் முதலிடம் பிடித்து காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளி 6 ம் வகுப்பு மாணவர் பிரகதீஷ் ராம் தேசிய போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார்.
கோயம்முத்துாரில் வயது 11 க்கு உட்பட்ட மாணவர்களுக்கான மாநில ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளி 6 ம் வகுப்பு மாணவரான பிரகதீஷ்ராம் பங்கேற்று விளையாடினார்.
இந்த போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்றதோடு, தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். இவர் ஹரியானாவில் நடந்த போட்டியிலும் பங்கேற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். இம்மாணவரை பள்ளி தலைவர் குமரேசன், துணை தலைவர் அருண்குமார், பள்ளி முதல்வர் உஷா குமாரி, துணை முதல்வர் பிரமே சித்ரா ஆகியோர் பாராட்டினர்.