/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கேள்விக்குறி: அரசு பள்ளி விடுதியில் வழங்குவது தரமான உணவா...: அதிகாரிகள் ஆய்வு செய்ய வலியுறுத்தும் மாணவர்கள்
/
கேள்விக்குறி: அரசு பள்ளி விடுதியில் வழங்குவது தரமான உணவா...: அதிகாரிகள் ஆய்வு செய்ய வலியுறுத்தும் மாணவர்கள்
கேள்விக்குறி: அரசு பள்ளி விடுதியில் வழங்குவது தரமான உணவா...: அதிகாரிகள் ஆய்வு செய்ய வலியுறுத்தும் மாணவர்கள்
கேள்விக்குறி: அரசு பள்ளி விடுதியில் வழங்குவது தரமான உணவா...: அதிகாரிகள் ஆய்வு செய்ய வலியுறுத்தும் மாணவர்கள்
ADDED : ஜூலை 05, 2025 11:17 PM

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட அரசுப்பள்ளி மாணவர்கள் விடுதிகளில் வழங்கப்படும் உணவை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்துகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் ஆதி திராவிடர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் 84 அரசு மாணவர்கள்விடுதி செயல்பட்டு வருகின்றன. அரசு மற்றும்அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6ம் வகுப்பிலிருந்துபிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் இந்த விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர்.
ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர். விடுதி மாணவர்களுக்கு காலையில் இட்லி, பொங்கல், உப்புமா, மதிய வேளையில் அரிசி சாதத்தோடு தினமும் வெவ்வேறு வகையான குழம்பு வகைகள் மற்றும் பொறியல், மோர் கொடுக்க வேண்டும்.
வாரம் ஒரு நாள் சிக்கன் அல்லது மட்டன் வழங்க வேண்டும் என பல்வேறு விதிமுறைகளை அரசு விதித்துள்ளது. ஆனால் தினமும் மூன்று வேளையுமே அரிசி சாதம் வழங்குவது, வாரந்தோறும் மட்டன், சிக்கன் வழங்காமல் இருப்பது, அனைத்து நாட்களிலும் மலிவாக கிடைக்கும் காய்கறிகளை பயன்படுத்தி சாம்பார் அல்லது ரசம் மட்டுமே வழங்கிவிட்டு அரசு விதிமுறைப்படி அனைத்தும் வழங்கியதாக கணக்கு காட்டப்படுவதாக மாணவர்கள் புகார் கூறுகின்றனர்.
பல அரசுப் பள்ளி விடுதிகளில் இதுபோல் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துஉள்ளது. விடுதிகளில் வழங்கப்படும் உணவு குறித்து உயர் அலுவலர்கள்மாணவர்களிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விடுதி மாணவர்கள் கூறுகையில், வறுமை காரணமாக அருகில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் இல்லாததாலும், குடும்ப சூழ்நிலை காரணமாக வீட்டில் இருந்து படிக்க முடியாமல் விடுதிகளில் தங்கி படிக்கிறோம். ஆனால் விடுதிகளில் அரசு விதிமுறைப்படி உணவு வழங்குவதில்லை. இது குறித்து வெளியே கூற முடிவதில்லை. இதில் மாணவிகள் விடுதிகளிலேயே அதிகமான பாதிப்பு ஏற்படுகின்றன.
அரசு அட்டவணைப்படி விடுதிகளில் உணவு வழங்கப்படுகிறதா என மாணவ, மாணவிகளிடம்விசாரணை நடத்த வேண்டும். விடுதிகள் பராமரிப்பு, அடிப்படை வசதி குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.