/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கேள்விக்குறியாகும் திடக்கழிவு மேலாண்மை
/
கேள்விக்குறியாகும் திடக்கழிவு மேலாண்மை
ADDED : ஜூலை 10, 2025 10:59 PM

காரைக்குடி; காரைக்குடி அருகே ஊரவயலில் மண்புழு உரக் கூடங்கள், திடக்கழிவு மேலாண்மை திட்டங்கள் வீணாகி வருகிறது.
தமிழக முழுவதும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து மக்கும் குப்பையில் இருந்து மண்புழு இயற்கை உரம் தயாரிக்க திட்டமிடப்பட்டு ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் கொட்டகை மண்புழு வளர்க்க தொட்டி என மண்புழு உரக் கிடங்கு அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மண்புழு உரக் கூடங்களை முழுமையாக பயன்படுத்தி விவசாயத்திற்கு மண்புழு உரம் பயன்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான ஊராட்சிகளில் மண்புழு உரக்கூடம் பயன்பாட்டிற்கு வராமலேயே வீணாகிறது. காரைக்குடி அருகே உள்ள ஊரவயலில் அமைக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டம் பயனின்றி பாழாகி வருகிறது. இதனால் நிதி வீணாவதோடு மண்புழு உரக்கூடம் அமைத்ததற்கான நோக்கமும் வீணாகி வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.