/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நாய், பூனை கடித்தால் ரேபிஸ் தடுப்பூசி கட்டாயம்
/
நாய், பூனை கடித்தால் ரேபிஸ் தடுப்பூசி கட்டாயம்
ADDED : ஜூலை 16, 2025 11:37 PM
சிவகங்கை: மாவட்ட அளவில் தெரு, வீடுகளில் வளர்க்கும் நாய், பூனைகள் கடித்தாலோ, கீறல் ஏற்படுத்தினால் ' ரேபிஸ்' தடுப்பூசி போட வேண்டும் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: ரேபிஸ் பாதிக்கப்பட்ட விலங்குகளின் உமிழ்நீரில் இருந்து மனிதர்களுக்கு விலங்கு கடிப்பதன் மூலமாகவும், கீறல் ஏற்படுத்தும் பட்சத்தில் அதன் மூலமும் கொடிய வைரஸ் நோய் பரவும். தெரு நாய்கள் மட்டுமின்றி வீடுகளில் வளர்க்கும் நாய், பூனைகள் கடித்தாலோ, கீறல் ஏற்படுத்தினால் உடனே காயம் பட்ட இடத்தில் சோப்பு போட்டு குழாய் நீரில் நன்கு கழுவ வேண்டும்.
ஆரம்ப சுகாதார, அரசு மருத்துவமனைகளுக்கு சென்று ரேபிஸ் தடுப்பூசி மற்றும் ரேபிஸ் இம்யூனோகுளோபலின் போட்டுக்கொள்ள வேண்டும். இந்த தடுப்பூசி அட்டவணைப்படி 28 நாட்களுக்குள் 4 முறை போட வேண்டும். தினமும் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளில் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்படும், என்றார்.