/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரயில் தண்டவாள கிளிப் அகற்றம்; வடமாநிலத்தவரிடம் விசாரணை
/
ரயில் தண்டவாள கிளிப் அகற்றம்; வடமாநிலத்தவரிடம் விசாரணை
ரயில் தண்டவாள கிளிப் அகற்றம்; வடமாநிலத்தவரிடம் விசாரணை
ரயில் தண்டவாள கிளிப் அகற்றம்; வடமாநிலத்தவரிடம் விசாரணை
ADDED : செப் 29, 2024 11:28 PM
மானாமதுரை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ரயில் தண்டவாள கிளிப் அகற்றப்பட்டது தொடர்பாக வடமாநில தொழிலாளர்கள் 4 பேரிடம் ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சூடியூரில் செப்.16ல் ரயில்வே தண்டவாளத்தில் இருந்து 420 கிளிப்களை மர்ம நபர்கள் அகற்றினர். இது குறித்து ரயில்வே ஊழியர்கள் கண்டறிந்ததால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது. அதுபோல செப்., 26 மானாமதுரை ரயில்வே ஸ்டேஷன் அருகிலேயே தண்டவாளத்தில் இருந்த சில கிளிப்கள் அகற்றப்பட்டு ரயிலை கவிழ்க்க சதி நடந்தது.
இந்த இரு சம்பவங்கள் குறித்து ரயில்வே பாதுகாப்பு படை டி.எஸ்.பி., பொன்னுச்சாமி தலைமையில் 3 தனிப்படைகள் விசாரித்து வருகின்றனர். முதற்கட்டமாக பார்த்திபனுார் மற்றும் மானாமதுரை ரயில்வே தண்டவாள பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் 4 பேரிடம் விசாரணையை துவக்கினர். முக்கிய குற்றவாளிகளை பிடிக்க தனிப்படையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.