/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.25 லட்சம் மோசடி: போலீஸ் விசாரணை
/
ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.25 லட்சம் மோசடி: போலீஸ் விசாரணை
ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.25 லட்சம் மோசடி: போலீஸ் விசாரணை
ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.25 லட்சம் மோசடி: போலீஸ் விசாரணை
ADDED : பிப் 11, 2025 03:24 AM
சிவகங்கை : ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே மொட்டையன் வயல் கருப்பணன் மனைவி சீதா 54. இவர் மதுரையில் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற போது மதுரையை சேர்ந்த ரமேஷ் மனைவி செல்வியின் பழக்கம் கிடைத்துள்ளது. செல்வி தான் இந்தியன் ரயில்வே கமிட்டி மெம்பராக இருப்பதாகவும், உயர் அதிகாரிகளிடம் பேசி படித்த இளைஞர்களுக்கு வேலை வாங்கி கொடுத்துக் கொண்டிருப்பதாகவும் யாரேனும் உறவினர் படித்திருந்தால் சொல்லுங்கள் வேலை வாங்கித்தருகிறேன் என்று கூறியுள்ளார்.
அதை நம்பிய சீதா தனது மகன் சிவராமனுக்கும், நாத்தனார் லட்சுமியின் மகன் மெய்யப்பனுக்கும் ரயில்வேயில் வேலை பெற்றுத்தர கூறியுள்ளார்.
2022 மே 16ம் தேதி ரூ.7 லட்சத்தை முன்பணமாக சீதா மற்றும் அவரின் நாத்தனார் இருவரும் செல்வி, அவரது கணவர் ரமேஷ், மகன் பாலா ஆகியோர்களிடம் கொடுத்துள்ளனர். இதேபோல் பல்வேறு தேதிகளில் செல்வி அவரது மகள் சிந்துஜா மற்றும் மருமகன் ராஜா ஆகியோர்களும் பணத்தை பெற்றுச் சென்றுள்ளார்கள்.
சீதாவிடம் ரூ.13 லட்சம், லட்சுமியிடம் ரூ.12 லட்சம் என ரூ.25 லட்சத்தை செல்வியின் குடும்பத்தினர் பெற்றுள்ளனர். பின்னர் வேலை வாங்கி தராமலும் பணத்தை திருப்பி கொடுக்காமலும் இருந்ததால் சீதா 2024 செப்.24ல் சிவகங்கை எஸ்.பி.,யிடம் புகார் மனு அளித்தார்.
இந்த புகார் மனுவை விசாரித்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் செல்வி, ரமேஷ், பாலா, சிந்துஜா, ராஜா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.