/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இருளில் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன்: சுரங்கப்பாதையால் மக்கள் அச்சம்
/
இருளில் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன்: சுரங்கப்பாதையால் மக்கள் அச்சம்
இருளில் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன்: சுரங்கப்பாதையால் மக்கள் அச்சம்
இருளில் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன்: சுரங்கப்பாதையால் மக்கள் அச்சம்
ADDED : ஜூலை 05, 2025 12:44 AM

காரைக்குடி; காரைக்குடி ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் மற்றும் ரயில்வே சுரங்கப்பாதை மின் விளக்கின்றி இருளில் மூழ்கிக் கிடக்கிறது.
காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனுக்கு தினமும் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இப்பகுதியில் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன், ரயில்வே மருத்துவமனை, ரயில்வே குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில், மின்விளக்கு இல்லாததால் இப் பகுதி முழுவதும் இருளில் மூழ்கிக் கிடக்கிறது.
இரவு நேரங்களில் குடியிருப்போர் மற்றும்பயணிகள் அச்சமடைந்து வருகின்றனர். இதேபோல், அரியக்குடி ரயில்வே கேட்டில் நீண்ட நேரம் நிற்பதை தவிர்க்க ரயில்வே ஸ்டேஷன் அருகே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுஉள்ளது. இதை பொன்நகர், லட்சுமி நகர், இலுப்பகுடி, அரியக்குடி பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சுரங்கப்பாதையில் மின்விளக்கு இல்லாததால் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. இரவு நேரங்களில் பெண்கள், வயதானவர்கள் இப்பாதையில் செல்ல தயங்குகின்றனர்.