/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் மழை விவசாயிகள் மகிழ்ச்சி
/
மானாமதுரையில் மழை விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : அக் 06, 2024 04:35 AM
மானாமதுரை : மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை மழை பெய்ததை தொடர்ந்து நீர்நிலைகளில் தண்ணீர் தேங்க துவங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கோடையை போன்று வெயில் கடுமையாக இருப்பதால் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.மேலும் விவசாயிகளும் தங்களது வயல்களை உழுது மழையை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
நேற்று மானாமதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்ததை தொடர்ந்து நகர் பகுதிகளில் உள்ள தெருக்களிலும்,ரோடுகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதி, மண்பாண்ட தொழிற்கூடங்களுக்கு முன் மழை நீர் தேங்கி நின்றது. இதேபோன்று கிராம பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் தேங்க துவங்கியதை அடுத்து விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.