/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மழையால் உருவான பள்ளம்; வாகன ஓட்டிகள் திணறல்
/
மழையால் உருவான பள்ளம்; வாகன ஓட்டிகள் திணறல்
ADDED : மே 21, 2025 02:46 AM

காரைக்குடி : காரைக்குடி அருகேயுள்ள பாதரக்குடி,கொரட்டி சாலை குண்டும் குழியுமாக காட்சியளிப்பதால் வாகன ஒட்டிகள் சிரமப்படுகின்றனர்.
காரைக்குடி அருகே உள்ள மானகிரியில் இருந்து கொரட்டி, பாதரக்குடி செல்லும் சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட நிலையில் ஆங்காங்கே சேதமடைந்து பள்ளங்களாக காட்சியளிக்கிறது. குன்றக்குடி பாதரக்குடி கொரட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கல்லல், சிவகங்கை செல்வதற்கு இச்சாலையை பயன்படுத்துகின்றனர். மேலும் கல்லல், தளக்காவூர் உள்ளிட்ட சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் குன்றக்குடி செல்வதற்கு இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். குண்டும் குழியுமான சாலையால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.