/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடி ரயில்வே ஸ்டேஷன் முன் குளமாக தேங்கிய மழை நீர்
/
காரைக்குடி ரயில்வே ஸ்டேஷன் முன் குளமாக தேங்கிய மழை நீர்
காரைக்குடி ரயில்வே ஸ்டேஷன் முன் குளமாக தேங்கிய மழை நீர்
காரைக்குடி ரயில்வே ஸ்டேஷன் முன் குளமாக தேங்கிய மழை நீர்
ADDED : அக் 14, 2024 08:34 AM

காரைக்குடி : காரைக்குடி ரயில்வே ஸ்டேஷன் முன் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளதால், பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
காரைக்குடி மார்க்கமாக ராமேஸ்வரம் - சென்னை, செங்கோட்டை - சென்னை, கன்னியாகுமரி -- புதுச்சேரி உட்பட ஏராளமான ரயில்கள் சென்று வருகின்றன. ரயில் மூலம் காரைக்குடிக்கு ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர்.
இங்கு வரும் பயணிகள் அனைவரும் புதிய ரயில்வே ஸ்டேஷன் நுழைவு பாதை கட்டுமான பணி நடப்பதால், பழைய ரயில்வே ஸ்டேஷன் பாதை வழியாக தான் ரயிலை பிடிக்க செல்கின்றனர்.
பழைய ரயில்வே ஸ்டேஷன் முன்பகுதி முறையாக பராமரிக்கப்படாமல், குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. கடந்த சில நாட்களாக காரைக்குடியில் பெய்து வரும் பலத்த மழைக்கு, ஸ்டேஷன் முன் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கின்றன.
இதனால், பயணிகள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
குடியிருப்பை சூழ்ந்த மழை நீர்
காரைக்குடி மாநகராட்சியுடன் தற்போது இலுப்பக்குடி ஊராட்சி இணைக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் அதிகளவில் வீடுகள் கட்டி குடியேறி வருகின்றனர். இதனால், இப்பகுதியில் பொன்நகர், லட்சுமி நகர், பொன்விழா நகர் என நகர் பகுதிகள் வளர்ந்து வருகின்றன. கடந்த 3 நாட்களாக பெய்த பலத்த மழையால், மழை நீர் குளம் போல் இந்நகர் பகுதி குடியிருப்புகளில் சூழ்ந்தது. இதனால், குடியிருப்பு வாசிகள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.