/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சீரணி அரங்கம் முன் தேங்கும் மழைநீர்
/
சீரணி அரங்கம் முன் தேங்கும் மழைநீர்
ADDED : நவ 22, 2024 04:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் பள்ளி அருகே தேங்கும் கழிவுநீரால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
இப்பேரூராட்சியில் மேலுார் ரோட்டில் சீரணி அரங்கம் முன்பாக உள்ள மைதானத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி சகதி, கழிவு நீராக மாறிவிடுகிறது.
அப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுகிறது. அவ்வழியாக நடந்து செல்வோரும் அருகில் உள்ள துவக்கப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களும் அவதிப்படுகின்றனர். முக்கிய விழாக்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தப்படக்கூடிய சீரணி அரங்கம் முன்பாக மழைக்காலங்களில் சகதி ஏற்படாத நிலையில் கிராவல் மண் கொட்டி சரி செய்ய அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.