/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சூறைக்காற்றுடன் மழை தென்னை, வாழை சேதம்
/
சூறைக்காற்றுடன் மழை தென்னை, வாழை சேதம்
ADDED : மே 17, 2025 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே சூறைக்காற்றுடன் பெய்த மழையால் தென்னை, வாழை உள்ளிட்ட மரங்கள் சாய்ந்து சேதமாயின.
இவ்வொன்றியத்தில் மே 15ம் தேதி இரவு பரவலாக மழை பெய்தது.மருதிப்பட்டி சுற்றுவட்டாரத்தில் சூறைக்காற்றுடன் ஒரு மணி நேரம் பெய்த பலத்த மழையால் 500க்கும் மேற்பட்ட வாழை மரங்களும், ஏராளமான தென்னை மரங்களும் சாய்ந்தன.
சில இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இரவு முழுவதும் மக்கள் சிரமப்பட்டனர்.
மழையால் தென்னை, வாழை சாய்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு பெற்றுத் தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.