ADDED : ஜூலை 18, 2025 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: மாவட்ட அளவில் உயர், மேல்நிலை பள்ளிகளில் வானவில் மன்ற ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.
அரசு உயர், மேல்நிலை பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அறிவியல், கணித பாடங்களை தானே பரிசோதனை செய்து கற்றலை மேம்படுத்தும் நோக்கில் வானவில் மன்றம் துவக்கப்பட்டது.
இந்த ஆண்டிற்கான மன்ற துவக்க விழா சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) மாரிமுத்து துவக்கி வைத்து, கையடக்க கம்ப்யூட்டர் வழங்கினார். அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி, கிளை தலைவர் மணவாளன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சகாய பிரிட்டோ பேசினர்.