/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியில் விடிய விடிய மழை வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்
/
காரைக்குடியில் விடிய விடிய மழை வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்
காரைக்குடியில் விடிய விடிய மழை வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்
காரைக்குடியில் விடிய விடிய மழை வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்
ADDED : டிச 04, 2025 05:26 AM

காரைக்குடி: காரைக்குடியில் நேற்று முன்தினம் இரவு முதல் பெய்த தொடர் மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
காரைக்குடி சங்கராபுரம் ஊராட்சிக்குட்பட்ட வைரவபுரம் தற்போது காரைக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள வீதிகளில் முறையாக சாக்கடை கால்வாய் அமைக்கப்படவில்லை. மழை நீர் செல்லும் வரத்து கால்வாயும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் மழைநீர் செல்ல வழியில்லை.
காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லுாரி மற்றும் பாரிநகர் வனப்பகுதியில் பெய்யும் மழைநீர் இப்பகுதிக்கு வந்து வரத்துக்கால்வாய் வழியாக கிராம கண்மாய்க்கு செல்லும். மழைநீர் செல்லும் வரத்து கால்வாய் மாயமானதால் வைரவபுரம் 4 மற்றும் 5வது வீதியில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. வீடுகளில் இருந்த பொருட்கள் வீணானது.
பாலகிருஷ்ணன் கூறுகையில்: 20 ஆண்டுகளாக இப்பிரச்னை நிலவுகிறது. மழை பெய்தால் வீதியில் தண்ணீர் தேங்கி, வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. மழைநீர் அதுவாக வடிந்தால் தான். வரத்து கால்வாய்களை பராமரிப்பது இல்லை. சாலை வசதி இல்லை. தண்ணீர் தேங்கி பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வீட்டுக்குள் வருகிறது. சாக்கடை கலந்து சுகாதார கேடும் நிலவுகிறது. ஆண்டுதோறும் இதே பிரச்னை நிலவுகிறது. முறையாக மழைநீர் செல்ல, வடிகால், சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.
கார்மேகம் கூறுகையில்: 1995 ஆண்டு முதல் எந்த வசதியும் இல்லை. கண்மாய்க்குள் குடியிருப்பது போல் இருக்கிறது. வீட்டுக்குள் மழைநீர் புகுந்து அரிசி மூடைகள். ப்ரிட்ஜ் அனைத்தும் வீணாகிவிட்டது. கால்வாயை துார்வாரி பல வருடங்கள் ஆகிறது. அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலைக்குச் செல்பவர்கள், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் வெளியேற முடியாமல் வீட்டில் இருக்கிறார்கள் என்றார்.

