/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை பொதிகை நகரில் மழை நீர் தேங்கி சுகாதாரக்கேடு
/
சிவகங்கை பொதிகை நகரில் மழை நீர் தேங்கி சுகாதாரக்கேடு
சிவகங்கை பொதிகை நகரில் மழை நீர் தேங்கி சுகாதாரக்கேடு
சிவகங்கை பொதிகை நகரில் மழை நீர் தேங்கி சுகாதாரக்கேடு
ADDED : டிச 01, 2024 11:50 PM

சிவகங்கை; சிவகங்கை நகராட்சி 1 வது வார்டு பொதிகை, விநாயகர் நகரில் மழை நீருடன் கழிவு நீர் தேங்கியுள்ளதால், கொசுக்கள் மூலம் நோய் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை- மேலுார் ரோட்டில் பொதிகை, விநாயகர் நகரில் அதிகளவில் வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர். இந்நகர் பகுதியில் பாதாள சாக்கடை, கழிவு நீர் கால்வாய் வசதிகளே இல்லை. இதனால், மழை காலத்தில் கழிவு நீர் செல்ல வழியின்றி, குடியிருப்பு பகுதியில் தேங்கி கிடக்கின்றன.
இந்த மழை நீருடன், கழிவுநீரும் தேங்கி கிடப்பதால் அதில் உருவாகும் கொசுக்களின் மூலம் நோய் பரவும் அச்சம் நிலவுகிறது. நகராட்சி நிர்வாகம் குடியிருப்புகளில் புகுந்துள்ள மழை நீரை அகற்ற வேண்டும்.