/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருச்சி-மானாமதுரை ஓடிய ரயில் காரைக்குடியுடன் நிற்பதால் அவதி ராமேஸ்வரம்--திருச்சி ரயிலில் கூட்ட நெரிசல்

ADDED : ஜூலை 15, 2025 03:39 AM

சிவகங்கை: திருச்சி-மானாமதுரை வரை இயங்கி வந்த பாசஞ்சர் ரயிலை காரைக்குடியுடன் நிறுத்தியதால், மற்ற ரயிலில் பயணிகள் கூட்டம் அதிகமாக  காணப்படுகிறது.
திருச்சியில் இருந்து மானாமதுரை வரை பாசஞ்சர் ரயில் இயங்கி வந்தது. இந்நிலையில் பராமரிப்பு நேரத்தை காரணமாக கூறி, இந்த ரயிலை திருச்சியில் (வண்டி எண் 56815) இருந்து காரைக்குடிக்கும், காரைக்குடியில் (வண்டி எண் 56816) இருந்து திருச்சிக்கும் இடையே இயக்கி வருகிறது.
தினமும் காலை 10:20 மணிக்கு திருச்சியில் புறப்படும் ரயில் மதியம் 12:10 மணிக்கு காரைக்குடி சேரும். அதே போன்று காரைக்குடியில் மதியம் 3:15 மணிக்கு புறப்படும் ரயில் திருச்சிக்கு மாலை 5:20 மணிக்கு சென்று சேரும்.
இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தாலும், மானாமதுரை வரை இயக்காதது சிவகங்கை, மானாமதுரை பயணிகளை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.
தினமும் மதியம் 3:00 மணிக்கு ராமேஸ்வரத்தில் (வண்டி எண் 16850) புறப்படும் ரயிலில் ஏராளமான பயணிகள் திருச்சிக்கு செல்கின்றனர். திருச்சி-மானாமதுரை இடையே ஓடிய ரயிலை நிறுத்தியதால், ராமேஸ்வரம் -- திருச்சி இடையே ஓடும் ரயிலில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகின்றன.
திருச்சிக்கு செல்லும் மானாமதுரை, சிவகங்கையை சேர்ந்த பயணிகள் ரயிலில் கூட்டம் அதிகரிப்பால் நின்று கொண்டே பயணிக்கும் நிலை ஏற்படுகிறது.
இதை தவிர்க்க தெற்கு ரயில்வே நிர்வாகம் மீண்டும் திருச்சி-மானாமதுரை இடையே பாசஞ்சர் ரயிலை இயக்க வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.