/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அன்னவாசலில் திறக்கப்படாத ரேஷன் கடை
/
அன்னவாசலில் திறக்கப்படாத ரேஷன் கடை
ADDED : ஜூன் 26, 2025 01:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள அன்னவாசலில் கட்டி முடிக்கப்பட்டு ஒன்றரை வருடங்களாகியும் ரேஷன் கடை கட்டடம் செயல்பாட்டிற்கு வரவில்லை.
மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அன்னவாசல் ரேஷன் கடை மூலம் அன்னவாசல்,அ.புதுார் கிராமங்களை சேர்ந்த700க்கும் மேற்பட்ட கார்டுதாரர்கள் பொருட்களை வாங்கி வருகின்றனர். ரேஷன் கடை கட்டடம் சேதமடைந்ததை தொடர்ந்து சில வருடங்களுக்கு முன்பு புதிதாக ரேஷன் கடை கட்டடம் கட்டப்பட்டும் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை.
பழைய ரேஷன் கடை குறுகிய இடத்தில் செயல்படுவதால் ரேஷன் பொருட்களை கொண்டு வருவதற்கும், அங்கு இருப்பு வைப்பதற்கும் சிரமமாக உள்ளது.