நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை அலவாக்கோட்டை ஊராட்சி நடுஅம்மச்சிப்பட்டியில் ரூ.9.13 லட்சத்தில் ரேஷன் கடை, கட்டாணிப்பட்டி ஊராட்சி பொன்குண்டுபட்டியில் ரூ.7.50 லட்சத்தில் கட்டப்பட்ட ரேஷன் கடை, சாலுாரில் ரூ.5.50 லட்சம் செலவில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை, கீழச்சாலுாரில் ரூ.7.50 லட்சத்தில் கட்டப்பட்ட ரேஷன் கடைகளை எம்.எல்.ஏ., செந்தில்நாதன் திறந்து வைத்தார்.
முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் ஒன்றிய செயலாளர் கருணாகரன், கோபி, சேவியர், மாவட்ட கவுன்சிலர் கோமதி தேவராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.