/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரேஷன் கடை விற்பனையாளர் ஸ்டிரைக் மாவட்ட அளவில் ஆர்ப்பாட்டம்
/
ரேஷன் கடை விற்பனையாளர் ஸ்டிரைக் மாவட்ட அளவில் ஆர்ப்பாட்டம்
ரேஷன் கடை விற்பனையாளர் ஸ்டிரைக் மாவட்ட அளவில் ஆர்ப்பாட்டம்
ரேஷன் கடை விற்பனையாளர் ஸ்டிரைக் மாவட்ட அளவில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 23, 2025 07:15 AM
சிவகங்கை : ரேஷனுக்கு தனித்துறை உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி சிவகங்கையில் ரேஷன் கடை ஊழியர்கள் ஸ்டிரைக் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு, ஆதார் சரிபார்ப்பு பணியை நடைமுறைப்படுத்த வேண்டும். பொது வினியோக திட்டத்திற்கு தனித்துறை, சரியான எடையில் பொட்டலமாக ரேஷன் கடைகளுக்கு பொருட்களை வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் மே 24 ம் தேதி வரை பல கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளனர்.
நேற்று ரேஷன் கடை விற்பனையாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு, தாலுகா வாரியாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இன்று அந்தந்த கோட்டாட்சியர் அலுவலகம் முன்பும், நாளை (ஏப்., 24) கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்வதென முடிவு செய்துள்ளனர்.
ரேஷன் கடை விற்பனையாளர்கள் ஸ்டிரைக்கால் நேற்று மாவட்ட அளவில் 300 க்கும் மேற்பட்ட கடைகள் பூட்டப்பட்டு கிடந்தன.
மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் சிரமம் அடைந்தனர்.
தேவகோட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் கே.ஆர்., விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். திருப்புவனத்தில் மாவட்ட தலைவர் மாயாண்டி தலைமையில், துணை தலைவர் சேதுராமன், வட்ட தலைவர் தங்கையா, மானாமதுரையில் மாவட்ட செயலாளர் திருஞானம் தலைமையில், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.