ADDED : மார் 14, 2024 03:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: ரேஷன் கடைக்கு தனித்துறை ஏற்படுத்த வலியுறுத்தி சிவகங்கையில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மாநில பொது செயலாளர் கே.ஆர்., விஸ்வநாதன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் மாயாண்டி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் திருஞானம், மாவட்ட பொருளாளர் கவுரி உட்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ரேஷன் கடைக்கு தனித்துறை ஏற்படுத்த வேண்டும். ரேஷன் கடைகளுக்கு எடை குறைவின்றி நுகர்பொருள் வாணிப கழகம் பொருட்களை வினியோகிக்க வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உட்பட 11 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

