/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியில் திறக்கப்படாத ரேஷன் கடைகள்: கார்டுதாரர்கள் புகார்
/
காரைக்குடியில் திறக்கப்படாத ரேஷன் கடைகள்: கார்டுதாரர்கள் புகார்
காரைக்குடியில் திறக்கப்படாத ரேஷன் கடைகள்: கார்டுதாரர்கள் புகார்
காரைக்குடியில் திறக்கப்படாத ரேஷன் கடைகள்: கார்டுதாரர்கள் புகார்
ADDED : ஆக 05, 2025 05:45 AM

காரைக்குடி : காரைக்குடி அருகே ரேஷன் கடை முறையாக திறக்கப்படாததால், ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் கார்டு தாரர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தளக்காவூர் ஊராட்சி கீரணிப்பட்டியில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இக்கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
இங்கு வாரத்தில் வியாழன் மற்றும் சனிக்கிழமை கடை திறந்து விநியோகம் செய்யப்பட வேண்டும். மற்ற நாட்களில் தளக்காவூரில் ரேஷன் கடை செயல்படும். ஆனால் கீரணிப்பட்டியில் குறிப்பிட்ட நாட்களில் ரேஷன் கடை திறப்பதில்லை. இதனால் கடை திறக்கும் நேரம் தெரியாமல் மக்கள் பொருட்களை வாங்குவதில் சிரமம் எழுந்து வருகிறது. தவிர ஒரு நாள் கடை இருந்தால் ஏதேனும் ஒரு பொருட்கள் மட்டுமே கிடைப்பதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அப்பகுதி மக்கள் கூறியதாவது:
வியாழன் மற்றும் சனிக்கிழமை கடை திறக்க வேண்டும். ஆனால், குறிப்பிட்ட நாளில் கடை திறப்பதில்லை. கடை திறப்பதற்கு முன்பு விற்பனையாளர் கிராம மக்களின் அலைபேசிக்கு மெசேஜ் செய்வார். அதனைப் பார்த்து மக்கள் பொருட்கள் வாங்க வேண்டும். அலைபேசி இல்லாத ஏழை எளிய மக்களுக்கு பொருட்கள் கிடைப்பது சிரமம். தவிர பொருட்களும் முறையாக வழங்குவதில்லை, என்றனர்.