/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பிள்ளையார்பட்டியில் ரோட்டில் திரியும் மாடுகள்
/
பிள்ளையார்பட்டியில் ரோட்டில் திரியும் மாடுகள்
ADDED : ஆக 05, 2025 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார் : பிள்ளையார்பட்டியில் தெரு மாடுகளின் நட மாட்டத்தால் பக்தர்கள் அவதிக்குள்ளாவது தொடர்கிறது. பிள்ளையார்பட்டி மாவட்டத்தின் முதன்மையான ஆன்மீக சுற்றுலாத்தலமாகும்.
இங்குள்ள கற்பக விநாயகர் கோயிலுக்கு சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்களை கோயிலுக்கு வெளியே தெருக்களில் திரியும் மாடுகள் விரட்டுவதும், கைகளில் உள்ள பைகளை வாயில் கவ்வு வதும் தொடர்கிறது. இதில் பலர் பாதிக்கப் பட்டுள்ளனர்.
சில நாட்களுக்கு முன் மாடு தள்ளிவிட்டு ஒருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி யானார். இதனால் பக்தர்கள் பிள்ளையார்பட்டியில் மாடுகள் பொதுவெளி யில் உலா வருவதைத் தடுக்க கோரியுள்ளனர்.