/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரீல்ஸ், டூவீலர் திருட்டு தொடர்கிறது கண்காணிப்பை அதிகப்படுத்த உத்தரவு
/
ரீல்ஸ், டூவீலர் திருட்டு தொடர்கிறது கண்காணிப்பை அதிகப்படுத்த உத்தரவு
ரீல்ஸ், டூவீலர் திருட்டு தொடர்கிறது கண்காணிப்பை அதிகப்படுத்த உத்தரவு
ரீல்ஸ், டூவீலர் திருட்டு தொடர்கிறது கண்காணிப்பை அதிகப்படுத்த உத்தரவு
ADDED : நவ 22, 2024 04:22 AM
திருப்புவனம்: தமிழகம் முழுவதும் ரீல்ஸ் மோகத்தால் அத்து மீறும் செயல்கள், திருட்டு உள்ளிட்ட சம்பவங்களால் விலை உயர்ந்த டூவீலர்களில் வரும் நபர்களை கண்காணிக்க உயர் அதிகாரிகள் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.
சமூக வலை தளங்களில் எதை செய்தாவது கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் தலைதுாக்கி வருகிறது.
டூவீலரில் சாகசம் செய்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிடும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் விபரீதங்களும் நிகழ்ந்து வருகின்றன. இதனை தடுக்க தமிழகம் முழுவதும் விலை உயர்ந்த டூவீலர்களில் வலம் வரும் நபர்களை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் ரீல்ஸ் மோகத்தில் அலையும் இளைஞர்கள் சிலர் விலை உயர்ந்த டூவீலர்கள் வாங்க வசதி இருப்பதில்லை.
இவர்களை குறிவைத்து ஒரு கும்பல் விலை உயர்ந்த டூவீலர்களை திருடி குறைந்த விலைக்கு போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது.
வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருக்கும் விலை உயர்ந்த டூவீலர்கள் அடிக்கடி திருடு போய் வருகின்றன.
விலை உயர்ந்த டூவீலர்களில் வருபவர்களை டூவீலருடன் முதலில் அலைபேசியில் படம் எடுத்து பதிவு செய்துவிட்டு பின் விசாரணையை தொடங்குகின்றனர்.
விலை உயர்ந்த டூவீலர்களில் வருபவர்களிடம் உரிய ஆவணங்கள் இருந்தால் மட்டும் விடுவிக்கின்றனர்.
அதிலும் முழு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே விடுவிக்கப்படுகின்றனர். நண்பர்கள், உறவினர்களிடம் இருந்து வாங்கி வந்தது என கூறினாலும் வாகன உரிமையாளர்கள் நேரில் வந்தால் மட்டுமே டூவீலர்கள் வழங்கப்படுகின்றன.
இல்லாவிட்டால் டூவீலர்களை பறிமுதல் செய்து வருகின்றனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு வாகன உரிமையாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.