/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
விபத்தில் மாணவர் பலி உறவினர்கள் மறியல்
/
விபத்தில் மாணவர் பலி உறவினர்கள் மறியல்
ADDED : ஆக 28, 2025 02:24 AM

சிவகங்கை:சிவகங்கையில் அரசு மருத்துவக் கல்லுாரியில் லேப் டெக்னீஷியன் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் பரத் 19, டூவீலர் விபத்தில் பலியானார். விபத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
சிவகங்கை இந்திராநகரைச் சேர்ந்த சுரேஷ் மகன் பரத் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் லேப் டெக்னீஷியன் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 12:00 மணிக்கு இவரும், அவரது நண்பர் அண்ணாமலை நகர் ராஜேஷ்கண்ணனும் 24, டூவீலரில் இளையான்குடி ரோட்டில் சென்றனர். அண்ணாமலை நகர் அருகே விபத்தில் சிக்கினர். இதில் பரத் இறந்தார். ராஜேஷ்கண்ணன் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பரத்தின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், ராஜேஷ்கண்ணனிடம் போலீசார் விபத்து குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் கோரி உறவினர்கள் அம்பேத்கர் சிலை அருகே மறியலில் ஈடுபட்டனர். தடுத்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆர்.டி.ஓ., விஜயகுமார், டி.எஸ்.பி., அமலஅட்வின், இன்ஸ்பெக்டர் அன்னராஜ் மற்றும் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். முழுமையாக விசாரிப்பதாக போலீசார் உறுதியளித்ததால் மறியல் கைவிடப்பட்டது.