/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தாய் வயிற்றிலேயே குழந்தை உயிரிழப்பு சிவகங்கையில் உறவினர்கள் போராட்டம்
/
தாய் வயிற்றிலேயே குழந்தை உயிரிழப்பு சிவகங்கையில் உறவினர்கள் போராட்டம்
தாய் வயிற்றிலேயே குழந்தை உயிரிழப்பு சிவகங்கையில் உறவினர்கள் போராட்டம்
தாய் வயிற்றிலேயே குழந்தை உயிரிழப்பு சிவகங்கையில் உறவினர்கள் போராட்டம்
ADDED : அக் 16, 2024 03:59 AM
சிவகங்கை : சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தாயின் வயிற்றிலேயே குழந்தை உயிரிழந்ததால் மருத்துவர்கள் இல்லாததே குழந்தை உயிரிழப்புக்கு காரணம் எனக் கூறி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை அருகேயுள்ள சாலுார் கிராமத்தை சேர்ந்தவர் ராம்குமார் 30. இவர் கட்டட வேலை செய்து வருகிறார். இவருக்கும் காயங்குளத்தை சேர்ந்த சரண்யா 26 என்ற பெண்ணிற்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து குழந்தை ஒன்று உள்ளது.
சரண்யா மீண்டும் கர்ப்பம் அடைந்ததால் இடையமேலுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்து வந்தார்.
அங்கு குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் சரண்யாவிடம் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் சரண்யாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டது. இடையமேலுார் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உறவினர்கள் அழைத்து சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
சரண்யா சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். நேற்று மாலை சரண்யாவின் கணவர் ராம்குமாரை அழைத்த செவிலியர்கள் குழந்தை வயிற்றிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் தெரிவித்த நிலையில் குழந்தை இறப்பிற்கான காரணம் குறித்து கேட்டுள்ளார். அதற்கு மருத்துவமனை நிர்வாகம் உரிய பதிலளிக்கவில்லை.
ஆத்திரம் அடைந்த ராம்குமார் மற்றும் உறவினர்கள் மகப்பேறு பிரிவில் டாக்டர்கள் பணியில் இல்லாததால் குழந்தையை உரிய நேரத்தில் வெளியே எடுக்காமல் இறந்ததாக கூறி மருத்துவக்கல்லுாரி முன்பு மானாமதுரை -தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டி.எஸ்.பி., அமலஅட்வின், இன்ஸ்பெக்டர் மணிகண்டன் அவர்களை சமாதானம் செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அழைத்து சென்றனர்.
மகப்பேறு மருத்துவத் துறை தலைவர் இந்திராணி கூறுகையில், தாய்க்கு சர்க்கரை நோய் இருந்துள்ளது. அவர் கரு உருவாகி 38வது வாரத்திலேயே மருத்துவமனைக்கு வந்திருந்தால் அவருக்கு போதிய சிகிச்சை அளிக்கப்பட்டு குழந்தையை காப்பாற்றி இருக்க முடியும். ஆனால் அவர் 39 வாரம் 6 நாட்கள் கழித்து தான் மருத்துவமனைக்கு வந்துள்ளார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்ற பிறகு மேல் சிகிச்சைக்கு தான் நேற்று முன்தினம் மருத்துவக் கல்லுாரிக்கு வந்தார்.
குழந்தைக்கும் கழுத்துப் பகுதியில் கொடி சுற்றி இருந்தது. டாக்டர்கள் போதிய சிகிச்சை அளித்து குழந்தையை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை.
சர்க்கரை நோய் உள்ள தாய்மார்கள் 12 முதல் 14 வாரத்திலும், 28 - 30, 32 - 34 வது வாரத்திலும் முறையான யுனிவர்சல் குளுக்கோஸ் பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும்.
இந்த பரிசோதனை செய்து கொண்ட பிறகு டாக்டரின் ஆலோசனைப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றார்.