/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கொத்தடிமை தொழிலாளர் 3 பேருக்கு நிவாரணம்
/
கொத்தடிமை தொழிலாளர் 3 பேருக்கு நிவாரணம்
ADDED : செப் 04, 2025 11:38 PM
சிவகங்கை:சிவகங்கை அருகே கண்டாங்கிபட்டியில் ஆடு மேய்க்கும் கொத்தடிமை தொழிலில் இருந்து மீட்கப்பட்ட 3 பேருக்கு அரசு சார்பில் ரூ.90 ஆயிரம் நிவாரண தொகையை கலெக்டர் பொற்கொடி வழங்கினார்.
சிவகங்கை அருகே கண்டாங்கிபட்டியை சேர்ந்த தேவராஜன் என்பவருக்கு சொந்தமான ஆடுகளை மேய்க்க தஞ்சாவூர் மாவட்டம், ஆவுடையான்கோட்டையை சேர்ந்த நீலகண்டன் 31, இவரது மனைவி முனியம்மாள் 29, மகன் 11 வயது சிறுவன் ஆகியோருக்கு பணம் கொடுத்து கொத்தடிமையாக வைத்திருப்பதாக சர்வதேச நீதி மிஷனில் புகார் அளிக்கப்பட்டது.
சட்டபணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி ராதிகா தலைமையில் கோட்டாட்சியர் விஜயகுமார், தொழிலாளர் ஆணைய உதவி கமிஷனர் சதீஷ்குமார் ஆகியோர் ஆய்வு செய்தபோது, சானிப்பட்டி கிராமத்தில் கொத்தடிமை தொழிலில் மூவரும் இருப்பதை உறுதி செய்தனர்.
இதையடுத்து வி.ஏ.ஓ., சரண்யா புகாரின்பேரில், சிவகங்கை தாலுகா போலீசார் தேவராஜ் மீது வழக்கு பதிந்து, கொத்தடிமையாக இருந்த மூவரையும் மீட்டனர். மீட்கப்பட்ட மூவருக்கும் தலா ரூ.30 ஆயிரம் வீதம் ரூ.90 ஆயிரம் அரசின் நிவாரண தொகையை கலெக்டர் பொற்கொடி நேற்று வழங்கினார்.