/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
விஷவாயு தாக்கி இறந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம்
/
விஷவாயு தாக்கி இறந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம்
ADDED : செப் 25, 2024 05:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : இளையான்குடியில் விஷவாயு தாக்கி இறந்த இருவரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவியை கலெக்டர் ஆஷா அஜித் வழங்கினார்.
இளையான்குடி அருகே சீத்துாரணி பிஸ்மில்லா நகரில் கழிப்பிடத்திற்கான குழி தோண்டும் பணியில் செப்., 21 அன்று சீத்துாரணி ராமையா 62, அம்முக்குடி பாஸ்கரன் 52 ஆகியோர் ஈடுபட்டனர்.
அப்போது விஷ வாயு தாக்கி உயிரிழந்தனர். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தொழிலாளர் நல வாரிய நிதியில் இருந்து தலா ரூ.5 லட்சத்தை கலெக்டர் வழங்கினார். மானாமதுரை எம்.எல்.ஏ., தமிழரசி உடனிருந்தார்.