/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை வைகை கரையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
/
மானாமதுரை வைகை கரையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
மானாமதுரை வைகை கரையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
மானாமதுரை வைகை கரையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
ADDED : ஜூன் 11, 2025 07:28 AM

மானாமதுரை : மானாமதுரை வைகை ஆற்றங்கரையோரம் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை பொதுப்பணித்துறையினர் மண் அள்ளும் இயந்திரங்களை கொண்டு அகற்றினர்.
மானாமதுரை நகர பகுதிகளில் ஓடும் வைகை ஆற்றங்கரையோரம் ஏராளமானோர் ஆக்கிரமித்து கடைகளை வைத்திருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. மேலும் சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்திலும் ஏராளமான விவசாயிகள் ஆற்றங்கரையோரம் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
இதனை தொடர்ந்து மானாமதுரை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரமேஷ், உதவி செயற் பொறியாளர் மோகன் குமார், உதவி பொறியாளர் அழகுராஜா ஆகியோர் ஆற்றங்கரையோரம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பகுதிகளை அளவீடு செய்தனர்.
நேற்று காலை மானாமதுரை சோனையா கோயில் அருகே ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை மண் அள்ளும் இயந்திரங்களை கொண்டு அகற்றினர். இந்த ஆக்கிரமிப்பு தொடர்ந்து நடைபெறும். இதனால், ஆக்கிரமிப்பாளர்கள் கடைகளை அகற்றி கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.