/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரேஷன் கார்டில் உயிரோடு இருப்பவர் பெயர் நீக்கம்: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் சர்ச்சை
/
ரேஷன் கார்டில் உயிரோடு இருப்பவர் பெயர் நீக்கம்: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் சர்ச்சை
ரேஷன் கார்டில் உயிரோடு இருப்பவர் பெயர் நீக்கம்: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் சர்ச்சை
ரேஷன் கார்டில் உயிரோடு இருப்பவர் பெயர் நீக்கம்: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் சர்ச்சை
ADDED : ஆக 25, 2025 11:50 PM
சிவகங்கை:
சிவகங்கையில் எவ்வித முன்அறிவிப்பின்றி ரேஷன் கார்டில் உறுப்பினர்கள் இறந்து விட்டதாக கூறி, பெயர்களை நீக்கியுள்ளனர். நீக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் உயிரோடு இருப்பதால் சர்ச்சை எழுந்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் 829 ரேஷன் கடைகளின் கீழ் 4.20 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் பொருட்களை வாங்கி செல்கின்றனர். இவர்களின் உண்மை தன்மையை அறியும் நோக்கில், அந்தந்த ரேஷன் கடைகளில் கார்டுகளில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களும் கைரேகைகளை பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
விற்பனையாளர்கள் விபரங்களை சேகரித்தனர். மாவட்டத்தில் உள்ள 4 லட்சத்து 20 ஆயிரத்து 91 கார்டுதாரர்களில், இன்னும் 1 லட்சம் கார்டுதாரர்கள் அந்தந்த ரேஷன் கடைகளில் தங்களது குடும்ப உறுப்பினர்களின் கைரேகைகளை பதிவு செய்யவில்லை.
2024 செப்., முதல் ரேஷன் கார்டுகளில் உள்ள உறுப்பினர்களில், சிலரது பெயர்களை தன்னிச்சையாக நீக்கி வருகின்றனர். வட்ட வழங்கல் அலுவலர்களிடம் கேட்டால், இறப்பு மற்றும் இடம்பெயர்ந்தது, தொடர்ந்து பல மாதங்களாக பொருட்களே வாங்காமல் இருப்பது போன்ற காரணத்தால் கார்டில் உள்ள பெயர்களை நீக்கியிருக்கலாம் என்கின்றனர். ஆனால், இம்மாவட்டத்தில் ஒட்டு மொத்த ரேஷன் கார்டுகளில் 30 சதவீத கார்டுகளில் உள்ள பெரும்பாலானவர்களின் பெயர்களை நீக்கியுள்ளனர்.
இறந்ததாக நீக்கம் சிவகங்கை சத்தியமூர்த்தி தெரு ஜாகிர் உசேன் 56, கூறியதாவது: என் குடும்ப ரேஷன் கார்டில் இருந்த என் பெயரை திடீரென நீக்கிவிட்டனர். உடல்நிலை பாதிப்பிற்கு சிகிச்சை பெற முதல்வரின் காப்பீடு திட்டத்திற்கு பதிவு செய்ய சென்றபோது, ரேஷன் கார்டு கேட்டனர். அப்போது தான் கார்டில் என் பெயர் இல்லை என தெரிவித்தனர். இதையடுத்து சிவகங்கை வட்ட வழங்கல் அலுவலகத்தில் கேட்டேன். அங்கிருந்த அலுவலர் நீங்கள் இறந்து விட்டதாக கூறி கார்டில் உங்களது பெயரை நீக்கி விட்டதாக தெரிவித்தார்.
உயிரோடு இருக்கும் என் பெயரை நீக்கியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் பொற்கொடியிடம் புகார் அளித்தேன், என்றார்.
விசாரித்து நடவடிக்கை சிவகங்கை மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜா கூறியதாவது: பொதுவாக ரேஷன் கார்டில் இறந்தவர்கள் பெயரை நீக்கும் முன், அப்பகுதி தாசில்தார், ஆர்.ஐ., வி.ஏ.ஓ.,க்களை நேரடி விசாரணை செய்து அறிக்கை பெற்ற பின்னரே நீக்குவோம். உயிரோடு இருப்பவர் பெயரை நீக்கியது குறித்து புகார் வந்துள்ளது. விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.