/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சாலைப்பணிக்காக மரங்கள் அகற்றம்: கூடுதல் மரக்கன்று நட நீதிபதி யோசனை
/
சாலைப்பணிக்காக மரங்கள் அகற்றம்: கூடுதல் மரக்கன்று நட நீதிபதி யோசனை
சாலைப்பணிக்காக மரங்கள் அகற்றம்: கூடுதல் மரக்கன்று நட நீதிபதி யோசனை
சாலைப்பணிக்காக மரங்கள் அகற்றம்: கூடுதல் மரக்கன்று நட நீதிபதி யோசனை
ADDED : ஏப் 18, 2025 11:46 PM

சிவகங்கை:
சாலை விரிவாக்கத்திற்காக மரங்கள் அகற்றப்படுவதை விட கூடுதல் மரக்கன்றுகளை நட்டு பரமாரிக்க வேண்டும் என வலியுறுத்துவதாக,'' சிவகங்கை அருகே நடந்த மரக்கன்று நடும் விழாவில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி இளந்திரையன் பேசினார்.
சிவகங்கை சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் 'மெகா' மரக்கன்று நடும் விழா சக்கந்தியில் நடந்தது. மாவட்ட செஷன்ஸ் நீதிபதி அறிவொளி வரவேற்றார். கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார்.
எஸ்.பி., ஆஷிஷ் ராவத் முன்னிலை வகித்தார். மாவட்ட வன அலுவலர் பிரபா, தேசிய நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் சந்திரன் மற்றும் அனைத்து நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் பேசியதாவது: மரக்கன்று நடுவது நிகழ்வு மட்டுமல்ல. சட்ட பணிக்குழு சார்பில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே நோக்கம். மத்திய, மாநில அரசு மூலம் மக்களுக்கு பலவிதமான திட்டங்கள் வழங்கப்படுகின்றன.
அரசின் திட்டங்களை மக்கள் எப்படி பயன்படுத்தி கொள்கிறார்கள். திட்டங்களை பெறுவதில் உள்ள சிரமங்களை போக்க மக்களுக்கான உதவிகளை செய்வது தான் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் பணி.
ஒவ்வொரு மாவட்டங்களிலும் 'மெகா' மரக்கன்று நடும் திட்டம் நடைபெற்றது. வெப்பமயமாதலை தடுப்பது மட்டுமின்றி, வருங்கால சந்ததியினர் உயிர் வாழ, இன்றியமையாதது மரம். பூமியை குளிர்விக்க இது போன்று மரக்கன்று நடும் திட்டம் செயல்படுத்தப்படும்.
முதலில் பொது இடம், அரசு அலுவலகம், ரோட்டோரங்களில் மரக் கன்றுகள் நட்டு வளர்க்க வேண்டும்.
தேசிய, மாநில நெடுஞ்சாலையின் இருபுறமும் மரம் நடுவது அவசியம். சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்படும் மரங்களை விட கூடுதலாக புதிய மரக்கன்றுகளை நட வேண்டும் என வலியுறுத்துகிறோம், என்றார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் நீதிபதி ராதிகா நன்றி கூறினார்.