/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை, இளையான்குடியில் கோயில்களில் சீரமைப்பு பணி
/
மானாமதுரை, இளையான்குடியில் கோயில்களில் சீரமைப்பு பணி
மானாமதுரை, இளையான்குடியில் கோயில்களில் சீரமைப்பு பணி
மானாமதுரை, இளையான்குடியில் கோயில்களில் சீரமைப்பு பணி
ADDED : பிப் 14, 2024 05:08 AM
மானாமதுரை : மானாமதுரை, இளையான்குடியில் வரும் மார்ச் 8ம் தேதி நடைபெறும் மகா சிவராத்திரி விழாவிற்காக கோயில்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் மகா சிவராத்திரி விழா அன்று சிவாலயங்களில் இரவு முழுவதும் 4 கால பூஜை நடைபெறுவது வழக்கம். குலதெய்வ கோயில்களிலும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்குச் சென்று சுவாமியை வழிபடுவது வழக்கமாக உள்ளது.
மானாமதுரை, இளையான்குடியில் உள்ள சிறிய மற்றும் பெரிய கோயில்களில் வருகிற மார்ச் 8ம் தேதி தேதி மாசி களரி எனப்படும் மகா சிவராத்திரி திருவிழாவிற்காக தற்போதிலிருந்தே கோயில்களை பக்தர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பக்தர்கள் கூறுகையில், குலதெய்வ கோயில்களில் மகா சிவராத்திரி அன்று சொந்த பந்தங்களோடு ஒன்றாக சேர்ந்து அன்று இரவு முழுவதும் கோயிலில் தங்கி குலதெய்வத்தை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம்.
சாமி கும்பிடும் உறவினர்களிடம் குறிப்பிட்ட நிதியை வசூலித்து அந்த நிதியிலிருந்து கோயிலை சீரமைத்து பூஜைகளை நடத்தி வருகிறோம். இந்த வருடமும் மகாசிவராத்திரி திருவிழாவை சிறப்பான முறையில் கொண்டாட தயாராகி வருகிறோம் என்றனர்.

