/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
40 ஆண்டு பிரச்னைக்கு தீர்வு; மாற்றப்பட்ட மின்கம்பங்கள்
/
40 ஆண்டு பிரச்னைக்கு தீர்வு; மாற்றப்பட்ட மின்கம்பங்கள்
40 ஆண்டு பிரச்னைக்கு தீர்வு; மாற்றப்பட்ட மின்கம்பங்கள்
40 ஆண்டு பிரச்னைக்கு தீர்வு; மாற்றப்பட்ட மின்கம்பங்கள்
ADDED : ஆக 16, 2025 11:57 PM

சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் ரோட்டை அடைத்து நின்ற மின்கம்பங்கள் தினமலர் செய்தி எதிரொலியாக 40 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றி அமைக்கப்பட்டது.
இப்பேரூராட்சியில் வடக்கு வேளார் தெரு, மீனாட்சி நகரை இணைக்கும் முக்கிய சாலையின் நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக 2 இடங்களில் மின்கம்பங்கள் இருந்தன.
இதனால் அப்பகுதி நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆட்டோ கூட வர முடியாத நிலை இருந்தது. இந்த இரு மின்கம்பங்களையும் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாத இடத்தில் மாற்றி நட அப்பகுதி மக்கள் 40 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இதுகுறித்து தினமலரில் ஜன. 17ல் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக இந்த மின்கம்பங்களை இடம் மாற்றத் தேவையான கட்டணத்தை பேரூராட்சி நிர்வாகம் செலுத்த முன் வந்தது.
பேரூராட்சித் தலைவர் அம்பலமுத்து, செயல் அலுவலர் சண்முகம் ஆகியோர் முயற்சியால் காப்புத்தொகை கட்டப்பட்டதை தொடர்ந்து நேற்று 2 மின்கம்பங்களும், நடுரோட்டில் இருந்து அகற்றப்பட்டு ஓரத்தில் நடப்பட்டது.