sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மன்னார்குடி -- மானாமதுரை ரயில் மீண்டும் இயக்க கோரிக்கை

/

மன்னார்குடி -- மானாமதுரை ரயில் மீண்டும் இயக்க கோரிக்கை

மன்னார்குடி -- மானாமதுரை ரயில் மீண்டும் இயக்க கோரிக்கை

மன்னார்குடி -- மானாமதுரை ரயில் மீண்டும் இயக்க கோரிக்கை


ADDED : ஜன 25, 2024 05:13 AM

Google News

ADDED : ஜன 25, 2024 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: மன்னார்குடியில் இருந்து மானாமதுரை வரை ரயில் இயக்கப்பட்டு வந்தது.

மன்னார்குடியில் இருந்து காலை 6:30 மணிக்கு புறப்படும் ரயிலானது நீடாமங்கலம் தஞ்சாவூர் பொன்மலை வழியாக திருச்சிக்கு காலை 9:10க்கு வரும். மீண்டும் திருச்சியிலிருந்து காலை 10:15 மணிக்கு புறப்பட்டு கீரனூர் புதுக்கோட்டை காரைக்குடி சிவகங்கை வழியாக மானாமதுரைக்கு மதியம் 1:20 க்கு வந்து மறு மார்க்கமாக மானாமதுரையில் இருந்து மதியம் 2:15 மணிக்கு புறப்பட்டு காரைக்குடி வழியாக மன்னார்குடிக்கு இரவு 8:15 மணிக்கு சென்றடையும். இந்த ரயிலை பொதுமக்கள் மாணவர்கள் என பலர் பயன்படுத்தி வந்தனர்.

மானாமதுரை சந்திப்பில் இருந்து மதுரை விருதுநகர் ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து வரும் பயணிகள், காரைக்குடிக்கு வந்து செல்ல ஏதுவாக இந்த ரயில் இருந்தது. கடந்த 4 மாதங்களாக இந்த ரயில் மானாமதுரை வரை செல்லாமல் காரைக்குடி வரை மட்டுமே வந்து செல்கிறது. மீண்டும் மானாமதுரை வரை ரயிலை நீட்டிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கையில்; காரைக்குடி - மானாமதுரை வரையிலும் லைன் பிளாக் பணி நடந்து வருகிறது. பணி முடிந்ததும் மீண்டும் மானாமதுரை வரை ரயிலை இயக்க வாய்ப்பு உள்ளது என்றனர்.






      Dinamalar
      Follow us