/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சென்னை - ராமேஸ்வரம் ரயில் நேரம் மாற்ற கோரிக்கை
/
சென்னை - ராமேஸ்வரம் ரயில் நேரம் மாற்ற கோரிக்கை
ADDED : ஏப் 18, 2025 11:45 PM
காரைக்குடி, ஏப்.19--
சென்னை ராமேஸ்வரம் ரயிலின் நேரத்தை மாற்ற வேண்டும் என தொழில் வணிகக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
காரைக்குடி தொழில் கழகத் தலைவர் சாமி திராவிட மணி கூறுகையில்: ரயில்வே துறையின் வளர்ச்சிப் பணிகள் குறித்து, மண்டல ரயில்வே துறையினரால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் கூட்டம் ஏப். 23 மற்றும் 24 தேதிகளில் நடைபெறுகிறது. இதில், சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம். சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 3:40க்கு பல்லவன் ரயிலும், மாலை 5: 40க்கு சேது எக்ஸ்பிரஸ் ரயிலும், இரவு 7:15 மணிக்கு ராமேஸ்வரம் போட் மெயிலும் புறப்படுகிறது.
இரவு 9:00 மணிக்கு தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு 2 ரயிலும் ராமேஸ்வரத்திற்கு ஒரு ரயிலும் புறப்படுகிறது. அடுத்தடுத்து 2 மணி நேர இடைவெளியில் புறப்படும் நேரம் மாற்றப்பட வேண்டும்.
எழும்பூரில் இருந்து தினமும் இரவு 7:15 மணிக்கு புறப்படும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலை இரவு 10:00 மணிக்கு மாற்றம் செய்தால், புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, ராமேஸ்வரம் பகுதி பயணிகளுக்கு வசதியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.