ADDED : செப் 02, 2026 06:03 PM
அ நிறம் | அளவு
திருப்புத்துார்,செப்.3-
திருப்புத்துார் காந்தி நகர் முதல் வீதியில் சேதமடைந்துள்ள மின்கம்பத்தை மாறறப் பொதுமக்கள் கோரியுள்ளனர்.
நகரின் பிரதான வீதிகளுள் ஒன்றான காந்தி நகரில் உள்ள சிமென்ட் மின்கம்பம் அடிப்பகுதியில் சேதமடைந்து உதிர்ந்து வருகிறது. தற்போது கம்பத்தினுள் இருந்த இரும்புக்கம்பியும் துருப்பிடித்து விட்டது. இதனால் மின்கம்பத்தின் அடிப்பகுதி வலுவிழந்து விட்டது.
மின்கம்பத்தை மாற்ற பல முறை கோரிக்கை வைத்தும் மின்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. பலத்த காற்று வீசினால் மின்கம்பம் விழும் நிலையில் உள்ளது. இழுத்து கட்டப்பட்டுள்ள மின்கம்பிகளால் அது நின்று கொண்டிருக்கிறது. விபத்து நடக்கும் முன் புதிய மின்கம்பத்தை நிறுவ மின்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
