ADDED : செப் 02, 2026 06:03 PM
அ நிறம் | அளவு
கீழச்சிவல்பட்டி,செப்.3-
கீழச்சிவல்பட்டி ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளி மாணவர் மாநில கைப்பந்து அணிக்குத் தேர்வு பெற்றார்.
இந்திய பள்ளிக் குழுமம் சார்பில் தமிழக மண்டல அளவிலான கைப்பந்து போட்டிகள் திண்டுக்கல்லில் நடந்தன. அதில் மாநில கைப்பந்து அணிக்கான வீரர்கள் தேர்வும் நடந்தது. அதில் இப்பள்ளியின் கைப்பந்து அணி வீரர் 12ம் வகுப்பு மாணவர் நடராஜன் பங்கேற்றார். நடராஜன் மாநில அணியில் பங்கேற்க தேர்வானார். பள்ளித்தலைவர் லெட்சுமணன், செயலர் அழகுமணிகண்டன், பொருளாளர் அங்கப்பன் பாராட்டினர். தலைமை ஆசிரியை உஷா, உதவி தலைமையாசிரியர் தங்கராஜ், உடற்கல்வி ஆசிரியர்கள் வாசு, மூர்த்தி, அழகுமீனாள் பாராட்டுப் பெற்றனர்.
