/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கீழப்பசலை கிராமம் அருகே இன்டர்லாக் கேட் அமைக்க கோரிக்கை
/
கீழப்பசலை கிராமம் அருகே இன்டர்லாக் கேட் அமைக்க கோரிக்கை
கீழப்பசலை கிராமம் அருகே இன்டர்லாக் கேட் அமைக்க கோரிக்கை
கீழப்பசலை கிராமம் அருகே இன்டர்லாக் கேட் அமைக்க கோரிக்கை
ADDED : அக் 02, 2025 04:03 AM
மானாமதுரை : மானாமதுரை அருகே கீழப்பசலை கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள 2 சாதாரண ரயில்வே கேட்களும் இன்டர்லாக் கேட்டாக மாற்றப்பட வேண்டுமென்று கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
கீழப்பசலை கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பல்வேறு பணி, ஊர்களுக்கு செல்ல கீழப்பசலை வழியில் ராமேஸ்வரம், விருதுநகர் செல்லும் ரயில் பாதைகளில் உள்ள 2 ரயில்வே கேட்களை தாண்டி செல்ல வேண்டிய நிலை உள்ளது. தினந்தோறும் காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரையிலும் 2 ரயில்வே கேட்களிலும் 4 பயணிகள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்று வரும் நிலையில் சரக்கு மற்றும் சிறப்பு ரயில்களும் செல்வதினால் நீண்ட நேரம் கேட் அடைக்கப்பட்டு மக்கள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.
கீழப்பசலை மக்கள் கூறியதாவது: 2 ரயில்வே கேட்களும் சாதாரண ரயில்வே கேட்டாக இருப்பதால் மானாமதுரையில் ரயில் கிளம்புவதற்கு முன் கேட் மூடப்படும் நிலையில் கீழப்பசலையை கடப்பதற்கு குறைந்தது 20 நிமிடம் ஆகிறது. அதேபோல் ராமேஸ்வரம் மார்க்கத்தில் சூடியூர் ரயில் நிலையத்தில் ரயில் கிளம்பும் போதும், மற்றொரு ரயில்வே கேட்டில் விருதுநகர் மார்க்கத்தில் நரிக்குடி ரயில் நிலையத்தில் ரயில் கிளம்புவதற்கு முன்பாக இங்கு ரயில்வே கேட்கள் மூடப்படுவதால் அரை மணி நேரத்திற்கும் மேலாக மக்கள் காத்துக் கிடக்க வேண்டிய நிலை உள்ளது.
இங்கு தானியங்கி இன்டர்லாக் கேட் அமைத்தால் கேட் மூடப்படும் நிமிடங்கள் மிகவும் குறைவாக இருக்கும் என்றனர்.