/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பட்டமங்கலம் ரோட்டை பராமரிக்க கோரிக்கை
/
பட்டமங்கலம் ரோட்டை பராமரிக்க கோரிக்கை
ADDED : அக் 23, 2025 11:28 PM

திருக்கோஷ்டியூர்: திருப்புத்துார் அருகே பட்டமங்கலத்தில் பஸ் நிறுத்தம் மற்றும் திருப்புத்துார் ரோடு சந்திப்பு பகுதியில் ரோடு சேதமாகி போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.
கல்லல் ஒன்றியம் பட்டமங்கலம் கடை வீதியில் செல்லும் ரோடு பராமரிப்பின்றி உள்ளது. பல இடங்களில் இந்த ரோடு சேதமடைந்துள்ளது. மேலும் திருப்புத்துார் ரோடு சந்திப்பில் குடிநீர் திட்ட குழாய் பணிகள் நடந்து அப்பகுதியிலும் ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாகி விட்டது.
இப்பகுதியில் மழைநீர் தேங்கி நடப்பதற்கு சிரமமாகவும், வாகன போக்குவரத்துக்கு இடையூறாகவும் உள்ளது.
இப்பகுதியில் இரவில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ரோடுகளை புதுப்பிக்கும் முன்பாக தற்காலிகமாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள கிராமத்தினர் கோரியுள்ளனர்.

