/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை விரிவாக்க பகுதியிலும் குடிநீர் இணைப்பு வழங்க கோரிக்கை
/
மானாமதுரை விரிவாக்க பகுதியிலும் குடிநீர் இணைப்பு வழங்க கோரிக்கை
மானாமதுரை விரிவாக்க பகுதியிலும் குடிநீர் இணைப்பு வழங்க கோரிக்கை
மானாமதுரை விரிவாக்க பகுதியிலும் குடிநீர் இணைப்பு வழங்க கோரிக்கை
ADDED : ஜன 03, 2024 06:11 AM
மானாமதுரை: மானாமதுரை நகராட்சியை ஒட்டிய விரிவாக்க பகுதிகளிலும் குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் 4500 குடிநீர் இணைப்புகள் மூலம் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
ராஜகம்பீரம் வைகை ஆற்று பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ள காரணத்தினால் மானாமதுரை நகராட்சி எல்லையை ஒட்டியுள்ள விரிவாக்க பகுதிகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அப்பகுதி மக்கள் கூறுகையில், மானாமதுரை நகராட்சி எல்லையை ஒட்டி உள்ள பகுதிகளான தாயமங்கலம் ரோடு,மேட்டு தெரு , அலங்கார் நகர், பட்டத்தரசி, ராம் நகர்,ஆனந்தவல்லி அம்மன் நகர்,பெமினா நகர், உடைகுளம், காட்டு உடைகுளம்,சிவகங்கை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் குடிநீர் இணைப்பு இல்லாத காரணத்தினால் தனியார் வாகனங்களில் வரும் குடிநீரை ஒரு குடம் ரூ.15 கொடுத்து வாங்கி வருகிறோம். ஆகவே மக்களின் நலன் கருதி நகராட்சி நிர்வாகம் இப்பகுதிகளுக்கும் நகராட்சி சார்பில் குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், தற்போது 2ம் கட்டமாக காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் மேற்கண்ட பகுதிகளில் குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.