/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வேலங்குடி ஊருணியை சீரமைக்க கோரிக்கை
/
வேலங்குடி ஊருணியை சீரமைக்க கோரிக்கை
ADDED : மே 15, 2025 04:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்:திருப்புத்துார் ஒன்றியம் வேலங்குடியில் சிதைந்து போன ஊருணியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலங்குடியில் பழமையான ஊருணி உள்ளது. சுற்றிலும் சிதைந்து போன கற்களுடன், பெயரளவில் ஒரு படித்துறையுடன் உள்ளது. கிராமத்தினரின் மழை நீர் சேகரிப்பு குளமாக இது இருந்துள்ளது.
சிவன் கோயில் எதிர்புறமாக உள்ள இந்த ஊருணி முன்னர் வெண்குட்டம் தீர்த்தம்' என்று அழைக்கப்பட்டது. சிதைந்து விட்ட இந்த ஊருணியை சுற்றிலும் தடுப்புச்சுவர் கட்டி, கூடுதல் படித்துறையுடன் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.