/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயில் மானாமதுரையில் நிறுத்த கோரிக்கை
/
ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயில் மானாமதுரையில் நிறுத்த கோரிக்கை
ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயில் மானாமதுரையில் நிறுத்த கோரிக்கை
ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயில் மானாமதுரையில் நிறுத்த கோரிக்கை
ADDED : நவ 20, 2025 03:41 AM

மானாமதுரை: ராமேஸ்வரத்திலிருந்து மானாமதுரை வழியாக சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ள நிலையில் அந்த ரயில் மானாமதுரையில் நிற்க வேண்டுமென பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பயணிகளின் பயண நேரத்தை குறைப்பதற்காக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் அறிமுகப்படுத்தப்பட்டு பல்வேறு ரயில்கள் இயக்கப்படுகிறது. ஹிந்துக்களின் புனித தலமாகவும், சுற்றுலா தலமாகவும் விளங்கக்கூடிய ராமேஸ்வரத்திலிருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில் வரும் டிசம்பர் முதல் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
இந்த ரயில் வார நாட்களில் புதன்கிழமை தவிர மற்ற நாட்களில் ராமேஸ்வரத்திலிருந்து மதியம் 2:30 மணிக்கு புறப்பட்டு ராமநாதபுரத்திலிருந்து 3:15க்கும்,சிவகங்கையிலிருந்து 4:10க்கும், காரைக்குடியிலிருந்து 4:40க்கும், புதுக்கோட்டையிலிருந்து 5:10க்கும், திருச்சியிலிருந்து மாலை 6:10க்கும், விழுப்புரத்திலிருந்து இரவு 8:15க்கும், தாம்பரத்திலிருந்து 9:40க்கு கிளம்பி சென்னை எழும்பூருக்கு இரவு 10:20 மணிக்கு சென்றடைய உள்ளது.
மறு மார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து காலை 5:30 மணிக்கு கிளம்பி ராமேஸ்வரத்திற்கு மதியம் 1:15 சென்றடைய உள்ளது. தென் மாவட்டங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், ரயில்களுக்கு டீசல் நிரப்பும் வசதி கொண்ட மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனில் இந்த ரயில் நிற்பது குறித்து அறிவிப்பு இல்லை.
ரயில் பயணிகள் கூறியதாவது: மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து சிவகங்கை,மதுரை, விருதுநகர்,ராமநாதபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களை சேர்ந்த பயணிகள் பல்வேறு ஊர்களுக்கு பயணம் செய்து வருகின்றனர்.
சில வருடங்களாக இங்கிருந்து இயக்கப்பட்ட மன்னார்குடி ரயிலை காரைக்குடியோடு நிறுத்தியது. அம்ரூத் திட்டத்தில் ரயில்வே ஸ்டேஷனை சீரமைக்காதது என பல்வேறு வளர்ச்சி திட்டங்களில் மானாமதுரை ரயில்வே ஸ்டேஷன் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
மக்கள் பிரதிநிதிகள் வந்தே பாரத் ரயிலையாவது மானாமதுரையில் நின்று செல்லவும், மன்னார்குடி மற்றும் பல்லவன் ரயிலை மானாமதுரை வரை நீட்டிக்கவும், மானாமதுரையில் இருந்து சென்னைக்கு புதிய ரயில்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்தனர்.

