/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் ரஸ்தாவில் நிற்க கோரிக்கை
/
எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் ரஸ்தாவில் நிற்க கோரிக்கை
எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் ரஸ்தாவில் நிற்க கோரிக்கை
எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் ரஸ்தாவில் நிற்க கோரிக்கை
ADDED : ஜூலை 03, 2025 03:21 AM
காரைக்குடி: காரைக்குடி தொழில் வணிக கழக தலைவர் சாமி திராவிட மணி கூறுகையில்: காரைக்குடி அருகே அமைந்துள்ள தேவகோட்டை ரஸ்தா ரயில்வே ஸ்டேஷன் திருச்சி ராமேஸ்வரம் நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது. .இங்கு தேவகோட்டை திருவாடானை பகுதி உட்பட சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் உட்பட பயணிகள், தினமும் வந்து செல்கின்றனர்.
தவிர காரைக்குடி தேவகோட்டை திருவாடானை ஆகிய மூன்று தாலுகாவை இணைக்கும் முக்கிய ரயில் நிலையமாகவும் ரஸ்தா ரயில் நிலையம் உள்ளது. கடந்த ஆண்டு ரூ.2 கோடி வரை இந்த ரயில்வே ஸ்டேஷன் மூலம் வருவாய் வந்துள்ளது. வட மாநிலங்களில் இருந்து வரும் ரயில்களும், கேரளா ஆந்திரா, புதுச்சேரி ரயில்கள் நிற்பதில்லை.
மேலும் தாம்பரம் ராமேஸ்வரம் ரயில், சிலம்பு எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம் வேளாங்கண்ணி உட்பட எக்ஸ்பிரஸ் ரயிலும் நிற்பதில்லை, இதனால் பயணிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே முக்கிய ரயில்வே ஸ்டேஷனான தேவகோட்டை ரஸ்தாவில், இந்த ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.