/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சக்கந்தி - கரும்பாவூர் விலக்கு ரோட்டை அகலப்படுத்த கோரிக்கை
/
சக்கந்தி - கரும்பாவூர் விலக்கு ரோட்டை அகலப்படுத்த கோரிக்கை
சக்கந்தி - கரும்பாவூர் விலக்கு ரோட்டை அகலப்படுத்த கோரிக்கை
சக்கந்தி - கரும்பாவூர் விலக்கு ரோட்டை அகலப்படுத்த கோரிக்கை
ADDED : ஆக 28, 2025 06:23 AM
சிவகங்கை : சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் சக்கந்தி மில்கேட் முதல் மட்டாகுளம், பாசாங்கரை வழியாக மதுரை ரோட்டில் கரும்பாவூர் வரையிலான ரோட்டை அகலப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் சக்கந்தி ஊராட்சியில் சக்கந்தி மில்கேட், அசிசிநகர், ஒண்டுப்புலி நகர், முடிகண்டன் ஊராட்சியில் மட்டாகுளம், மானாகுடி பிரிவு, பாசாங்கரை, மீனாட்சிபுரம் விலக்கு, உடையநாதபுரம் வழியாக மதுரை -தொண்டி ரோட்டில் உள்ள கரும்பாவூர் விலக்கு வரை 6 கி.மீ., துாரத்திற்கு கிராமப்புற ரோடு செல்கின்றன. இந்த ரோடு வழியாக தான் கிராமங்களுக்கு டவுன் பஸ்கள், பள்ளி வாகனங்கள், விவசாயிகளின் டிராக்டர் மற்றும் டூவீலர்கள் அதிகளவில் சென்று வருகின்றன.
கிராமங்களை இணைக்கும் சக்கந்தி மில்கேட் முதல் கரும்பாவூர் வரையிலான இந்த ரோடு 3 மீட்டர் அகலத்தில் மட்டுமே போட்டுள்ளனர். வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. குறிப்பாக மானாகுடி கண்மாய் கரையில் இருந்து பாசாங்கரை வரை தார்ரோடு போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
எனவே கிராமங்களை இணைக்கும் 6 கி.மீ., துார ரோட்டின் அகலத்தை அகலப்படுத்தி கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் கலெக்டர் பொற்கொடியிடம் மனு அளித்தனர்.