
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: மின்துறையினர் பராமரிப்புப் பணிகளுக்காக பிப்.12ல் அறிவித்துள்ள மின்தடை வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக கண்காணிப்பு பொறியாளர் அறிவித்துள்ளார்.
அகில இந்திய தொழிற்சங்கங்கள் பிப்.12ல் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதால் அன்றைய தினம் சிவகங்கை மாவட்டத்திலுள்ள துணை மின்நிலையங்களில் அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
சாக்கவயல், தேவகோட்டை, இளையான்குடி யில் பிப்.10க்கும் மதகுபட்டி, காளையார் கோவில், கல்லலில் பிப்.11க்கும், சாலைக்கிராமம், எஸ்.புதுார், ஆ.தெக்கூர், கீழச்சிவல்பட்டியில் பிப்.17க்கும் மின்தடை மாற்றப்பட்டுள்ளது.

