/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தமிழை அறிவியல் மொழியாக்க கோரி சிவகங்கையில் தீர்மானம்
/
தமிழை அறிவியல் மொழியாக்க கோரி சிவகங்கையில் தீர்மானம்
தமிழை அறிவியல் மொழியாக்க கோரி சிவகங்கையில் தீர்மானம்
தமிழை அறிவியல் மொழியாக்க கோரி சிவகங்கையில் தீர்மானம்
ADDED : ஜூன் 30, 2025 06:12 AM
சிவகங்கை : ஆராய்ச்சிக்காக தமிழை அறிவியல் மொழியாக அறிவிக்க கோரி சிவகங்கையில் நடந்த தமிழ்நாடு கலை இலக்கிய சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றினர்.
கூட்டத்தில் மாவட்ட தலைவராக சரோஜினி, செயலாளர் குணசேகரன், பொருளாளர் ரத்தினம், துணை தலைவர்கள் தமிழ்செல்வம், உஷாநந்தினி, மாணிக்கம், செங்கோல், இணை செயலாளர்கள் லெனின், முத்துமாடன், நிலா செல்வன், சங்குமுருகன் ஆகியோர் தேர்வாகினர்.
சிவகங்கையில் அரசு தமிழ் கல்லுாரி துவக்க வேண்டும். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்.
உயர்கல்வி, ஆராய்ச்சி கல்வி தமிழ்வழி மூலம் கற்பிக்க ஏதுவாக தமிழை அறிவியல் மொழியாக அறிவிக்க வேண்டும்.
நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக ஆக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.