ADDED : பிப் 21, 2024 12:05 AM
தேவகோட்டை, - ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ.சங்க கூட்டம் சங்க நிறுவனர் போசு தலைமையில் தேவகோட்டையில் நடந்தது. துரைராஜ் வரவேற்றார். சைதை துரைசாமி மகன் வெற்றி படத்தை நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் திறந்து வைத்தார்.
நகராட்சி துணை தலைவர் ரமேஷ், மாநில பொது செயலாளர் ரவிரங்கராஜன், ஆசிரியர் சுப்பு, பி.எஸ்.என்.எல். முன்னாள் அலுவலர் முத்துராமலிங்கம், சங்க செயலாளர் ரெங்கசாமி, காசிநாதன், வடிவேலு, கோபிநாத், சுப்பிரமணியன் பேசினர்.
கூட்டத்தில் மாநில அரசு வழங்கிய ஓய்வூதியர், அலுவலர்களுக்கு வழங்கிய மருத்துவ காப்பீட்டு அட்டை பலன் தராததால் அரசே ஏற்று செயல்படுத்த வேண்டும், மருத்துவ காப்பீடு பெற முடியாமல் பல ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ.க்கள் கருவூலத்தில் மனு செய்து காத்து கிடக்கின்றனர். இதை ரத்து செய்து அரசே முழு தொகையை வழங்க வேண்டும் உட்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

