ADDED : ஆக 23, 2025 11:44 PM
சிவகங்கை:சிவகங்கையில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை மாநாடு நடந்தது.
மாவட்ட செயலாளர் கிருஷ்ணக்குமார் வரவேற்றார். மாநிலத் துணைத்தலைவர் தமிழரசன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் அசோக்குமார், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் மாவட்டத் தலைவர் நாகேந்திரன், கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் பெரியசாமி, தமிழ்நாடு நில அளவை அலுவலர் மாவட்டச் செயலாளர் கார்த்திக், தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் மாவட்ட தலைவர் ராஜமார்த்தாண்டன் கலந்து கொண்டனர்.
அரசு அலுவலர்களின் பணிப்பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு உடனே இயற்ற வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் உள்ள அனைத்து நிலையிலான காலிப்பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
மாவட்ட இணைச் செயலாளர் முத்துராமலிங்கம் நன்றி கூறினார்.