/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிறு பாசன கணக்கெடுப்பு வருவாய்த்துறை தீவிரம்
/
சிறு பாசன கணக்கெடுப்பு வருவாய்த்துறை தீவிரம்
ADDED : அக் 18, 2025 03:52 AM
திருப்புவனம்: தமிழகம் முழுவதும் சிறுபாசன கணக்கெடுப்பு பணிகளில் வருவாய்த் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
மத்திய அரசு ஐந்தாண்டு களுக்கு ஒரு முறை சிறு பாசன முறை குறித்து கணக்கெடுத்து வருகிறது. 7வது ஆண்டாக இந்த ஆண்டு கணக்கெடுப்பு பணிகளில் தாலுகா வாரியாக விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் திறந்த வெளி மற்றும் ஆழ்துளை கிணறுகள் எத்தனை, கிணறுகள் மூலம் எத்தனை ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
எந்த வகையான பயிர்கள் சாகுபடி செய்யப்படு கின்றன. வருடம் முழுவதும் பாசனத்திற்கு தேவையான தண்ணீர் கிணறுகளில் கிடைக்கிறதா என ஆய்வு செய்கின்றனர்.
திறந்த வெளி மற்றும் ஆழ்துளை கிணறுகள் படம் பிடிக்கப்பட்டு தனி சாப்ட்வேர் மூலம் செயற்கைகோள் உதவியுடன் ஆவணப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் அடுத்த ஆண்டிற்கான வேளாண்துறையில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து திட்டமிடப்படும், மத்திய அரசின் 7வது சிறுபாசன கணக்கெடுப்பு மே மாதம் தொடங்கப்பட்டு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் 2019ல் 566 ஆழ்துளை, 1954 திறந்த வெளி கிணறுகள் இருந்தன. 2024ல் ஆழ்துளை கிணறுகள் 969 ஆக உயர்ந்த நிலையில், திறந்தவெளி கிணறுகளின் எண்ணிக்கை குறைந்து உள்ளது. இந்தாண்டு 1500 கிணறுகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளன.
விவசாயிகள் கூறுகை யில், திறந்த வெளி கிணறுகள் தண்ணீரின்றி வறண்டு வருவதால் ஆழ்துளை கிணறுகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது வரும் காலங் களிலும் ஆழ்துளை கிணறுகள் தான் அதிகரிக்க வாய்ப்புள்ளது, என்றனர்.