/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நெருக்கடியில் சித்தா மருத்துவ பிரிவு
/
நெருக்கடியில் சித்தா மருத்துவ பிரிவு
ADDED : அக் 18, 2025 03:52 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் அரசு மருத்துவமனையில் செயல்படும் சித்தமருத்துவப் பிரிவிற்கு தனி கட்டட வசதி ஏற்படுத்த பொது மக்கள் கோரியுள்ளனர்.
திருப்புத்துார் அரசு மருத்துவமனை தாலுகா அந்தஸ்திலானது. இங்கு சித்த மருத்துவத்திற்கு தனிப் பிரிவு 40 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. தினசரி 50க்கும் மேற் பட்டவர்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். சித்த மருத்துவப் பிரிவு இயங்கி வந்த கட்டடம் பழுதாகி சேதமடைந்ததால் அக்கட்டடத்தை இடிக்க பரிந்துரைக்கப்பட்டது. இதனால் மருத்துவமனை அலு வலகத்திற்கு எதிரே உள்ள அறையில் தற்போது சித்தா மருத்துவப் பிரிவு இயங்குகிறது.
ஒரு மருத்துவர், மருந்தாளுநர்,உதவியாளர் ஆகியோர் பணிபுரியும் சித்தா மருத்துவப்பிரிவிற்கு தற்போதைய இடம் போதிய வசதி இல்லாததால் தனி கட்டட வசதியை விரைவாக ஏற்படுத்த வேண்டுமென்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.